Friday 8 January 2010

கல்விக்களஞ்சியமாக உருவெடுக்கும் பெரம்பலூரிலிருந்து. . . .

மண்ணின் மைந்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்
இளநெஞ்சங்களே !
இரண்டொரு நாட்களுக்கு முன் அலுவல் நிமித்தமாக பெரம்பலூர் செல்ல நேரிட்டது. அங்கு ஒரு காலைப்பொழுதில் துறையூர் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். அப்போது சுவாமி திரையரங்கு முன் நான் கண்ட காட்சி என்னை திகைப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் திரையிடப்பெற்ற அசல் திரைப்படத்தின் வானுயர்ந்த கட்டவுட் உயர்ந்து காணப்பட்டது தல என்று சுறுங்க வருணிக்கப்பட்ட திரை நாயகன் அஜித் உயர்ந்து காணப்படுகிறார். அவரின் காலடியில் சுமார் 20 குட்டித்தலைகள் சிதறி கிடக்கின்றன. இதை காணும்போது எனக்கு எப்போதோ பார்த்து ரசித்த இந்தி திரைப்படம் ஹாதிம் தாய் நினைவுக்கு வந்தது. ஒரே மாறுபாடு. குட்டித்தலைகள் மரத்தின் கிளைகளில் தொங்குவதற்கு பதில் தரையில் கிடந்தன. ஒவ்வொரு தலையும் யாருக்கு உரியன என்று அச்சிடப்பெற்றிருந்தது. அவர்கள் வகிக்கும் ரசிகர் மன்ற பதவிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் இன்னும் வியப்பிற்குரியது அனைவருமே கலை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் முது நிலை பட்டதாரிகள். கட்டவுட்க்கான செலவுகளையும் அவர்கள்தான் ஏற்றிருக்கவேண்டும் . இதைக்காணும் ஒவ்வொரு பெற்றோரும் வெட்கித் தலை குனிவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு எத்தனையோ பொறுப்புகளும் பதவிகளும் காத்திருக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொறுப்புகளை சற்று கூர்ந்து பாருங்கள். கல்விக்கூடங்கள் மலிந்துகிடக்கும் பெரம்பலூர் நகரத்தில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பலபகுதிகளில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் இவ்வூர் கல்வி நிலையங்களில் கல்வி பயில கூடியிருப்பதை மண்ணின் மைந்தர்கள் கவனிக்கவேண்டும் வருங்கால இளைஞர்களிடமிருந்து இந்த நாடு ஏராளமாய் எதிர் பார்க்கிறது. அருள் கூர்ந்து இந்த நாட்டையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றி கொண்டுவிடாதீர்கள்
கட்டவுட்களுக்கு பாலபிஷேகம் செய்வதை தவிர்த்து கட்டவுட்களில் கவுரவமாக இடம்பெற முயலுங்கள்.
நிழல்களைத்தவிர்த்து நிஜங்களாக வாழ்ந்து காட்டுங்கள்.
போலிகளிடமிருந்து விலகி அசல்களாக வாழ முயலுங்கள்.
--------------------------------------
பாண்டியன்ஜி
இடுகை 0006

Monday 4 January 2010

புதிய மாற்றம் ! - வேர்கள்

http://verhal.blogspot.com/
                      இன்று முதல் வேர்கள் தன் நிலைகளை மேலும் அனைத்து திசைகளிலும் பரப்ப வசதியாக இணையதளத்தின் புதிய முகவரி ஒன்றுக்கு மாறுகிறது.                                                                                                       ( from  blog.co.in  to  http:// verhal.blogspot.com  )                       உலகிலேயே கல் தோன்றி மண் தோன்றா காலத்திய மூத்த மொழி நம் அன்னை தமிழ்தான் என்று தக்க சான்றுகளுடன் உலக அரங்கில் உறுதி செய்த மொழிஞாயிறு தேவநேய பாவணர் மற்றும் கொடிய வருமையிலும் பழந்தமிழ்ச்செல்வங்களை புதிப்பித்த அறிஞர் பெருமக்களையும் தமிழகம் மெல்ல மெல்ல நினைவிழந்து வருகிறது. முன்னாளில் இரண்டாம் இராஜராஜ சோழன் , நம்பியாண்டார் நம்பியிலிருந்து இன்னாளில் பாவணர் வரை வருமையிலும் பழந்தமிழ்ச் செல்வங்களை சுமந்து தொடர் ஓட்டம் போன்று அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து வந்ததை எளிதில் மறக்க இயலாதது. செல்லரித்துப்போன தமிழ்ச்சுவடிகளையும் கையெழுத்து படிவங்களையும் தேடிக்கொணர்ந்து புதிப்பித்த வறலாறு புல்லரிக்கத் தக்கது. தற்கால வணிகக்கூச்சலில் நினைவிழந்து வாழும் புதியதலை முறைக்கு தொடர்ந்து நினைவூட்டுவதை தலையாய கடமையாக கருதுகிறது. அவ்வப்போது நிகழும் கலை இலக்கியம் அரசியல் சமூகம் அறிவியல் சார்ந்த மாற்றங்களில் வேர்கள் தன் நேர்மையான கருத்துக்களை பதிவு செய்யும்.தேவையற்ற மொழிக்கலப்பு எழுத்துக்களில் மலிந்து கிடக்கும் மொழிசார்ந்த பிழைகளை தானும் திருத்தி மற்றோரும் திருந்த முயலும்.    எழுத்துலகில் வேர்கள் - இலக்கிய நயம் சார்ந்த எழுத்து நடையையே மிகவும் விரும்புகிறது. இருப்பினும் - தற்காலசூழலுக்கேற்ப மண்சார்ந்த (வட்டார மொழிகளில் ) மொழிகளில் எழுதப்படும் எழுத்துக்களையும் நேசசிக்கிறது. இலக்கண மறபுக் கவிதைகளையும் அதனை மீறி எழுதப்படும் புதுக்கவிதைகளையும் (மகாகவி பாரதி , பிச்சைமூர்த்தி வழிகளில் ) வேர்கள் விரும்புகிறது. தெரிந்தெடுக்கப்பெரும் படைப்புகளுக்கு வேர்கள் பணப்பரிசுகளையும் வழங்கும். வலைப்பூ எழுத்துச்சிற்பிகளில் ஒரு சிலராவது துணையிருந்தால் வேர்களுக்கு இத்தனையும் சாத்தியமே.! - சென்னையிலிருந்து ... பாண்டியன்ஜி
--------------------------------------------------------------------------------------------
இடுகை - 0005 - 05 jan 2010

Labels:

Friday 1 January 2010

புதுவருடம் 2010

இனிய தமிழ் ெஞ்சங்களே !
புதுவருடம் 2010 க்கு வழி விட்டு 2009 விலகி கொண்டிருக்கிறது . இளய தலைமுறைக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்து விலகிநின்று வேடிக்கை பார்க்கும் முதிய தலைமுறையை போல .
2010- ன் முதல் படியில் நிற்கும் நாம் ஒரு கணம் கடந்து வந்த 2009 திரும்பி பார்த்திடுவோம் .சாதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2009ன் சில நினைவுகளை அசைபோடுவோம் . ஏறத் தாழ ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு தமிழக சட்டசபையில் அனுமதி.
விடுதலைபுலிகளிடமிருந்து கிளிநொச்சி , முல்லைதீவு பகுதிகளை இலங்கை ராணுவம் கைபற்றியது.
ஸ்லம் டாக் மிலியனர் திரைபடத்துக்கு கோல்டன் குளோப் மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் ஏ.ஆர் ரஹ்மான்
சத்யம் கம்யூட்டர்ஸ் ராமலிங்கராஜூவின் ஊழல் உலகெங்கும் எதிரொலித்தது.
தமிழகத்தில் நிகழ்ந்த இடைதேர்தல்களில் தி மு க வெற்றிபெற்றது.
சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு ஏற்றது.
இலங்கை தமிழர் படுகொலையை எதிர்த்து மூன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் தீக்குளிப்பு .
முன்னாள் மத்தியதொலை தொடர்புத்துறை மந்திரி சுக்ராமுக்கு ஊழல் வழக்கில் மூன்றாண்டு சிறை.
விண்வெளியில் ரஷ்ய அமெரிக்க செயற்கை கோள்கள் மோதின.
சிறுகதை மன்னன் ஜெயகாந்தனுக்கு பத்ம ஸ்ரீ விருது
அமெரிக்கவிண்வெளி ஓடம் டிஸ்கவரி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தேசத்தந்தை காந்தி பயன்படுத்திய கடிகாரம் கண்ணாடி,தட்டு,குவளை மற்றும் செருப்பு போன்றவை லண்டனில் ஏலம் விடபட்டது.விஜய்மல்லையா 9.3 கோடிக்கு ஏலம் எடுத்து மானம் காத்தார்.
டாடா நிருவனம் ஒரு லட்சம் விலையுள்ள நானோ காரை வெளியிட்டது.
தமிழக துணைமுதல்வராக ஸ்டாலின் நியமனம்.
இந்தியாவின் பதினைந்தாவது மக்களவை தேர்தல் முடிவுகள் .காங்கிரஸ கூட்டணி 261 இடங்களை கைபற்றியது.
இந்திய பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் பதவிஏற்பு.
ஈழ போரில் பிரபாகரன் மரணம்.இலங்கை வெற்றி.
வட கொரியா சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
பாபர் மசூதி இடிப்பு – லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல்.
அனைத்து மதத்தினரும் திருமணத்தை பதிவு சொய்ய தமிழகரசு சட்டம்.
தனிதெலுங்கானா கோரி ஆந்திராவில் கலவரம்.
வேதாரண்யம் அருகே பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் பலி.
ஆறு குட்டி ஏவுகணைகளுடன் ஓசியன் சாட் விண்ணில் விரைந்தது.
நிலவில் நீர் இருப்பதற்கான சான்றுகளை சந்ராயன் கண்டறிந்தது.
காஞ்சியில் அண்ணா நூற்றாண்டு கொண்டாட்டம் நிகழ்வுற்றது.
தேக்கடியில் படகு கவிழ்ந்து 45 பேர் பலி.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ஒபாமா பதவிஏற்பு.
மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து. விமானத்தில் பயணம் செய்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி ஐந்து பேருடன் பலி
அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு கிடைத்தது.
சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசு பிரிட்டனை சேர்ந்த ஹிலாரி மான்டொல்லுக்கு கிடைத்தது
இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு தமிழகத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கிடைத்தது.
பாப் இசை கலைஞன் மைக்கேல் ஜாக்ஸன் மாரடைப்பால் மரணம்.
தொடர் மழையால் நீலகிரியில் பேரழிவு.
வேர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறது
இடுகை 0004