Thursday 31 December 2009

33 வது சென்னை புத்தக கண்காட்சி

சென்னை பச்சையப்பன் கல்லுரிஎதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி மைதானத்தில்
33 வது சென்னை புத்தக கண்காட்சி மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது. 500 க்கு மேற்பட்ட நிருவனங்கள் அரங்குகளில்இடம்பெற்றிருக்கிறார்கள் . மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும் அரங்குகளை காணும்போது நல்ல நம்பிக்கை நெஞ்சில் துளிர் விடுகிறது.பெருகிவரும் கணனி வளர்ச்சியும் சின்ன திரையின் ஆளுமையும் நம்மிடையே படிக்கும் பழக்கத்தை பறித்திடுமோ என்ற ஐயம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய தலைமுறையிடையே சென்றடைய வேண்டிய செய்திகளை அச்சு வடிவில் மட்டுமின்றி ஒலி ஒளி வடிவங்களிலும் பல பதிப்பகங்கள் கொடுத்திருக்கிறன.
கடந்த 30-12 -2009 அன்று இந்த சந்தையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் கலைஞர் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான விருதை 29 புத்தகங்களுக்கும் அதனை பதிப்பித்த 20 பதிப்பகங்களுக்கும் அறிவித்தார்.   தினம் தினம் வித்தியாசமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவுறும் சந்தை வருகிற 10-01-2010 வரை நிகழ இருக்கிறது.
ஒரு கணம் எண்ணிப்பாற்கிறேன்.
ஏற தாழ 1966 – 67 களில் பத்து பதினைந்து பதிப்பகத்தார் இணைந்து துவக்கிய இந்த முயற்சி எத்தனை அசுற வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்த புத்தக சந்தை மேலும் மேலும் விழுது பரப்பி வளர்ச்சியடைய வேர்கள் வாழ்த்துகிறது

இடுகை 0003

Tuesday 29 December 2009

தமிழ்ப்புத்தாண்டு 2041

தமிழ்ப்புத்தாண்டு 2041
2010 ஜனவரி 14 ….!
புதிய தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து எதிரும் புதிருமான கருத்துக்கள் ஒலிக்கதொடங்கிருக்கின்றன. புதிய அறிவிப்பிற்கான தேவையை விடுத்து மாற்றியவரின் பின்னணியை மனதில் கொண்டு குரல்கள் எழும்பி ஒலிக்கின்றன.
எந்த ஒரு நிகழ்வுக்கும் இரண்டுவித எண்ணங்கள் இருப்பது உண்மையே. இருப்பினும் உலகில் தோன்றியுள்ள அனைத்து உயிரினங்களிலும் தலையாயது மனித பிறவியே என்று கூறிகொண்டிருக்கிறோம். இலைகளையும் தழைகளையும் தரித்துகொண்டிருந்த மனிதன் இன்று அனைத்து துறை மாற்றங்களுக்கு ஊன்றுகோலாயிருக்கிறான்.ஆனால் மற்ற உயிரினங்கள் தங்கள் நிலைகளை மாற்றிகொண்டதில்லை. அதுமட்டுமே மனித இனத்தின் மகத்தான சிறப்பாகும்.
இந்த மாற்றத்தை தமிழக அரசு மட்டுமே தன்னிச்சையாக அறிவித்துவிடவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.இந்த மாற்றம் தேவைதானா என்பதை சிந்திக்கின்ற பொறுப்பு யாருக்கு உண்டு ? தமிழனாய் பிறந்தவனுக்கும் தமிழாய்ந்த தலைவர்களுக்கும் மட்டுமே உண்டு.மாற்றத்தை வேண்டிய அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை சட்டமாக்கி தந்த முதல்வருக்கு நன்றி பாரர்ட்டியதையும் கவனிக்க வேண்டும்.இந்த மாற்றத்துக்கு தேவையான காரணங்களையும் ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.இருப்பினும் இவையனைத்தும் தேவையான அளவிற்கு மக்களை சென்றடையவில்லை என்றே கருதுகிறேன்.
இவையனைத்தையும் தள்ளி விட்டு வழி வழியாய் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பவர்கள் மனதிற் கொள்ளவேண்டும்.முன்னதாக அச்சுவசதிக்காக தந்தை பெரியார் தமிழ் எழுத்தில் செய்த மாற்றத்தை இறுதிவரை அவரால்மட்டுமே செயல்படுத்தமுடிந்தது.இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லப்பட்ட தி மு க கூட மாற்றத்தை ஏற்றுகொள்ளவில்லை.ஆனால் புரட்சி நடிகர் கையெழுத்திட்ட சட்டம் ஒரே நாளில் தமிழ் எழுத்துக்களின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதை நாம் அறிவோம்..எனவே வீம்புக்கு குரல கொடுப்போர் தங்களோடு தங்கள் வழிபாடு முடிவுறும் என்பதை உணரவேண்டும்.
மலர்ந்த முகத்தோடு புதிய புத்தாண்டை தை திங்களில் எதிர்கொள்ளுவோம
இடுகை 0002

Labels:

கனவு

எண்ணியமுடிதல்    வேண்டும்
வணக்கம் ! என் இனிய தமிழ் நெஞ்சங்களே !
ஏறத் தாழ பத்து மாதங்களாயிற்று. வேர்கள் என்ற புதிய வலைதளத்தை துவக்கும்போது என் தமிழ் எண்ணங்களை கணினி மொழியில் வெளிப்படுத்துவதில் இத்தனை சிரமங்கள் இருக்குமென்று தோன்றவில்லை. மென்பொருளை கையாளுவதில் போதுமான பயிற்சியில்லை. இருப்பினும் என்னுள் எங்கோ முடங்கி கிடந்த எழுத்துலக கனவு மெல்ல மெல்ல மலரத் துடிக்கிறது.
மீண்டும் மீண்டும் சந்திக்க ஆசை !
வேர்கள் பிறந்தது !
----------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
 - நான் என்றும் வியந்து நோக்கும் பாரதி .
---------------------------------------
வேர்கள் வேண்டுவதும் அதுவே
பாண்டியன்ஜி    29 dec 2009
இடுகை - 0001

Labels: ,