இலவசம் ஒன்றும் இலவசமல்ல !
பாண்டியன்ஜி
நீண்டநாட்களாக பேசப்பட்டு வந்த ஒரு கூற்று சட்டமன்ற . நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்க நெருங்க விஸ்வ
ரூபம் எடுத்து தினந்தினம் ஏடுகளிலும் ஊடகங்களிலும் ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்தை விரும்புகிற அரசியல் தரகர்களும் இந்த கூற்றை திரும்பத் திரும்ப வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் விரும்புகிற அரசை ஏற்படுத்தி விட முடியும் என்றே கருதுகிறார்கள்.
அந்த கூற்றுதான் என்ன.
1 )அரசை ஆளுகின்ற கட்சி இலவச திட்டங்களை பெருவாரியாக அறிவித்து பாமரமக்களின் வாக்குக்களை பறித்துஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
2 ) இலவசங்களை வாரி இறைப்பதன் மூலம் பொதுப்பணத்தை பெரிதும் விரயம் செய்கிறது.
3 )இலவசப்பொருள்களை வழங்குவதன் மூலம் உழைக்கத் தயாராயிருக்கும் மக்களை சோம்பேறியாக்குகிறது.
இதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளையும் அரசு மீது வெறுப்புற்றிருக்கும் ஒரு சில நடுத்தர வர்கத்தின்
வாசகர் கடிதங்களையும் ஆட்சிக்கெதிரான அரசியல் தரகர்களின் நடுப்பக்க நேர்காணலையும் வெளியிட்டு இன்றைய
ஏடுகள் மக்களை ஒருவித மூளைச்சலவைக்கு உள்ளாக்கத் துவங்கிவிட்டன.
முன்னதாக இதுபோன்ற இலவச திட்டங்களை செயல்படுத்தவே முடியாது , ஆளும் கட்சி பொய்யான வாக்குறுதிகளை
வாரி இறைக்கிறது என்று பொருளாதார புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி கூச்சல் எழுப்பிய பெரும்பாலான கட்சிகள்
இப்போது தங்கள் நிலையை மாற்றி இது போன்ற திட்டங்கள் எதிர் கால அழிவையே ஏற்படுத்தும் என்று ஆர்பரிக்கத் துவங்கி விட்டன. பெரும்பாலோர் எண்ணுவது போல
இலவசதிட்டங்கள் இந்த மண்ணுக்கு இன்று நேற்று வந்ததல்ல. சங்ககாலத்திலிருந்தே இதற்கான அடையாளங்கள் நிரம்பவே காணப்படுகிறது. விடுதலைக்குப் பின்பொறுப்பேற்றிருந்த அரசுகள் தீட்டிய திட்டங்கள் பெரும்பாலும் தனிமனிதனைத் தவிற்து மொத்த சமூகத்தையும் கருத்தில் கொண்டே செயல் படுத்தப்பட்டன.பொதுமக்களின் அன்நாளைய வாழ்வு அவர்களுக்கு பெரிதும் பழகிப்போயிருந்து. ஆனால் இன்றோ நிலமை வேறு. இன்று விதைக்கப்படும் விதையின் பலனை இன்றோ நாளையோ சுவைக்கத்துடிக்கும் மனோபாவம்.
உலகெங்கும் மாறிவரும் கலாச்சார மாற்றத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் இந்த அரசிடமிருந்து தனக்கென எதையாவது நேரடியாக எதிர்பார்க்கிறான்.தன்னுடைய தனிப்பட்ட தேவை ஒவ்வொன்றுக்கும் இந்த அரசு செவி சாய்க்க வேண்டுமென்றே நினைக்கிறான். இந்த தனிமனித விருப்பத்தை மீறி இனி வருகிற எந்தவொரு அரசும்
நிலைப்பதோ நீடிப்பதோ இயலாத ஒன்றாகிவிட்டது. எந்தவொரு கட்சியும் ஆட்சியில் அமர்ந்த பிறகு செயல் படுத்துகிற திட்டங்கள்அனைத்தும் வர இருக்கும் அடுத்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டே இருக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. இன்று இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற கணிசமான பொருளாதார வளற்சி இந்தநாட்டிற்கு தேவையான முழுமையான வளற்சியைக் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை. நகர்புறங்களில் ஏற்பட்டிருக்கிற பிரமிக்ககத்தக்க வளற்சி இன்னும் கிராமப்புறங்களுக்கு நெருங்காமலேயே இருக்கிறது.பெரு நகரங்களில் பரவிக்கிடக்கும் வேலைவாய்ப்பு இன்னும் கிராமிய இளைஞர்களுக்கு எட்டாத கனவாகவே இருக்கிறது.மொத்தத்தில் பணம் படைத்தவர்கள் மேலும் பணம் பெருக்கவே வழி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் வாழ்க்கைச் சூழலில் சிக்கித் திணறிய பெரு நகரங்களைச்சார்ந்த இந்த நடுத்தரவர்கத்தினரை இப்போதெல்லாம் அடிக்கடி வணிகவளாகங்களிலும் பொழுதுபோக்கிடங்களிலும் காணமுடிகிறது. இருந்த போதிலும் இந்த நாட்டில் உண்ண உணவும் உறங்க இடமும் இல்லாதோர்கள் நிறைந்தே காணப்படுகிறார்கள். மின்சாரம் நுழையாத கிராமங்களே இல்லையென்று அரசு விளித்துக் கொண்டாலும் ஓலைக்குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்பே முழுமையாக பெருமையைப் பெற முடிந்தது.குறைந்தபட்சம் இந்த நடுத்தர வர்கம் அனுபவிக்கும் வசதிகளும் சாதனங்களும் அடித்தட்டு மக்களுக்குஇன்னும் எட்டாத கனவாகவே இருக்கிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை முழுமையாக சமன் செய்ய இயலாவிடினும் குறைந்தபட்சம் இந்த அல்ப கனவுகளையாவது நிறைவேற்றிவைக்கும் தார்மீக பொறுப்பு வாக்குகளை பெற்றுஆட்சிக்கு வரும் அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும்.
இடுகை 0040
( கருத்துக்கள் தொடரும் )
( கருத்துக்கள் தொடரும் )
Labels: free
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home