Wednesday, 8 December 2010

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !
( ஸ்பெக்ட்ரம் ஊழல் -- தினமணியின் அவசரம் -- விகடனின் பரபரப்பு -- ஞானியின் பிதற்றல் )
பாண்டியன்ஜி
தினந்தினம் பாராளுமன்றத்தை தள்ளி வைத்து தள்ளிவைத்து பாராளுமன்றக்கட்டிடமே அரித்துவாருக்கருகில் நகர்ந்து போயிருப்பதாக அண்மையில் வெளியான ஓர் கேலிச்சித்திரத்தைக் கண்டு வெகுவாக ரசித்தேன். தினமலர் நாளிதழில் வெளியான அந்த கேலிச்சித்திரம் என்னையறியாமல் என்முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலுக்கு காரணமாய் அமைந்தது..
நாள் முழுதும் -
ஹோ ... என்ற பேரிரச்சல். கைகளை மேலே தூக்கியவாறு இறுக்கைகளை விட்டு இங்கும் அங்கும் ஓடும் காட்சி .
அனைத்துக்கும் மெல்லிய புன் முறுவலோடு கைகளை அசைத்து அமரச்சொல்லும் பாபுஜியின் புதல்வி மீராகுமாரின் காட்சி . பயனின்றிப்போக.. அடுத்த
சில நிமிடங்களில் எழுந்து அவைக்குப்பின்னால் மறையும் தோற்றம்...
நாள்தோரும் கண்டு சலித்துப்போன தொலைக்காட்சி.
கடந்த 18 நாட்களுக்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளால் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தாங்கள் எழுப்புகின்ற அத்தனை கோரிக்கைகளுக்கும்ஆளும் அரசு அடிபணிய வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் முரட்டுத்தனமான பிடிவாதம்.
 ஆளுகின்ற அரசு எந்தக்கட்சியைச் சார்ந்தது என்ற அடிப்படையே சந்தேகத்திற்குரியதாக்கப்பட்டிருந்து. ஒருவேளை ஆளுகிற அரசுக்குத் தேவையான பெரும்பான்மை
இல்லாமற்போய் விட்டதோ என்றும் எண்ணத்தோன்றியது.
எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துஆட்சிபீடத்த்தில் அமர இந்த துருப்புச்சீட்டை ஒருபோதும் கைவிடலாகாது என்பதில் எதிர்கட்சிகள் அனைத்தும் உறுதியாக நின்றன. நாடாளுமன்ற இரு அவைகளையும் தொடர்ந்து முடக்குவதன்மூலம் இந்த தேசத்துக்கேற்படும் நஷ்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதையும் அது இவர்கள் சுட்டிக்காட்டுகிற ஸ்பெக்ட்ரம் யூக ஊழல் கணக்கின் மதிப்பைக்காட்டிலும் பல்மடங்கு பெருகக்கூடும் என்பதையும் இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.
இதே போன்ற கோரிக்கைகளை இதற்குமுன்னால்இவர்கள் ஆளும் பீடத்தில் இருந்தபோது எப்படி எதிர்நோக்கினார்கள் என்பதைக்கூட எண்ணிப்பார்த்ததாக தெரியவில்லை.
மத்திய மாநில அரசுகளின் ஒவ்வொரு இலாக்காகளிலிருந்து கிடைக்கப்பெருகிற எண்களை அடிப்படையாகக்கொண்ட தகவல்களைத்தணிக்கைக்குட்படுத்தி புதிய எண்ணிக்கையைக் கண்டறிந்து குற்றங்குறைகளை சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட இலாக்காக்களுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கமான ஒன்றுதான்.அறிக்கைகளில் காட்டப்பெற்ற குறைகளை நிவர்த்தி செய்து பதிலறிக்கை சமர்ப்பிப்பது சம்மந்தப்பட்ட
இலாக்காவின் கடமை.
பெரும்பாலும் இது போன்று குறைகள் சுட்டிக்காட்டப்பெரும் தணிக்கை அறிக்கைகளை அரசின் எந்தவொரு இலாக்காவும் இதுவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை என்பதுதான் உண்மை.
இந்த முறை தொலைத்தொடர்புத்துறைக்கு தரப்படவேண்டிய இதுபோன்றவொரு தணிக்கை அறிக்கை மாறாக இந்திய பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் முன்னதாகவே கிடைத்திருக்கிறது. இந்திய பத்திரிக்கைகளோ இலாக்கா அரசு நீதிமன்றம் இவைகள் அனைத்தையும் தாண்டி
தலைமை வகித்த அமச்சரையே குற்றவாளியாக்கி பின் தீர விசாரிக்கத் துவங்கியிருக்கின்றனர்.யூகங்களையே முடிவாக்கி திரும்பத்திரும்ப கொட்டை எழுத்தில் அச்சிடுவதன் மூலம் விற்பனையையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சம்பந்த்ப்பட்ட இலாக்கா அமைச்சர் முழுமையாக ஊழல் புரிந்திருக்கலாம் அல்லது தவறான வழிகாட்டுதலின் மூலம் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.அல்லது இலாக்கா ஊழியர்கள் இந்த இழப்புக்கு காரணமாயிருக்கலாம்.
கண்களால் காண்பது காதுகளால் கேட்பது இவைகளைத் தவிர்த்து தீர ஆய்ந்து அறிவதே அறிவு.
இருந்த போதிலும் -
எதிர் கட்சிகளின் கடுமையான கோரிக்கைக்கிணங்கி சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதவி விலகியிருக்கிறார். அதுமட்டுமன்றி
ஸ்பெக்ட்ரம் பிரச்சனை நீதிமன்றத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. நீதிமன்றமும் தன் விசாரணையைத் துவக்கி விட்டது.நாட்டுக்கேற்பட்ட அல்லது ஏற்படயிருந்த நஷ்டத்தையும்அதன் மூலம் ஆதாயம் அடைந்த அத்தனை பேர்வழிகளையும் நீதிமன்றம் அடையாளம் காட்டவேண்டும். ஊழல் நிறைந்த இந்த தேசத்தின் ஒரே நம்பிக்கை இன்று மிச்சமிருக்கிற நீதிமன்றங்களே.
இதற்குள் இந்த தேசத்தின் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் தங்கள் பங்குக்கு பல்வேறு கோணங்களில்
குற்றங்களையும் அதற்கான தண்டனையையும் அதன் மூலமாக கலைஞருக்கும் அவர் கட்சிக்கும் ஏற்படக்கூடிய சரிவையும் அதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் பரவலக வெளிப்படுத்தத் துவங்கிவிட்டனர்.
வேஷ்டி கட்டிக்கொண்டு டெல்லிக்கு போனால் எத்தனை கேவலமா பாக்கிறான். - என்று ஓர் மேதாவி எழுதுகிறார். டெல்லிப்பட்டணத்தில்
பேண்ட் அணிந்த அத்தனை பேரும் பரமயோக்கியர் என்பது இவரது எண்ணம்.
 கொள்ளைபோன பணத்திலே சரிந்து போன அமெரிக்க அரசையே தூக்கிநிறுத்லாம் - என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர். ஆலமரத்தடியிலே அமர்ந்து கற்பனையில் தயிர் விற்றவனின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இன்னொரு அறிஞரோ....பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களால் டெல்லிப்பட்ணமே நாற்றமடிக்கிறது. - என்று கட்டுரை எழுதுகிறார். ( நாற்றம் என்ற சொல்லுக்கு மணம் என்றே பொருள் என்று கருதுகிறேன்.)
பதவிப்பேராசையும் அதிகார அத்து மீரல்களும் நிறைந்த எந்தவொரு அரசியல்வாதியின் அந்தரங்கத்தொலைபேசி உரையாடல்கள் எப்போதுமே மணம் பரப்பியதில்லை என்பதை அறிந்திருப்பாரோ என்னவோ.அரசு சலுகைகளை ஒரு சமயத்தில் எதிர்நோக்கிய இந்த மேதாவியின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து கேட்டுருந்தாலும்இப்படியொரு பிரத்தியோகமான துர்நாற்றத்தைதான் நுகர்ந்திருக்க முடியும்.
ஒவ்வொருமுறை மந்திரிசபை ஏற்படும்போதும் அல்லது விரிவாக்கப்படும்போதும் சம்மந்தப்பட்ட தலைகளின் தொலைபேசி உரையாடல்களை தொகுப்போமானால் விதம் விதமான துற்நாற்றங்களை நுகரமுடியும். இதற்கு இந்த நாட்டில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல என்பதை உணரவேண்டும்.பெரும்பாலான இலாக்கா நிர்வாக பதவிகளுக்கு கூட இது போன்ற பேரமே நிகழ்கிறது.
கலைஞரின் வயோதிகம் இத்தகய கூச்சலுக்கு இடமளித்துவிட்டது துரதிஷ்டமானதுதான். கலைஞரின் வாரிசுகளே தமிழகத்தின் தனிப்பெரும் தலமைக்கு தீராத அவப் பெயரை தேடித்தந்திருக்கிறார்கள். கலைஞரின் அடிப்படை வரலாற்றை ஒவ்வொருவரும் ஊன்றி படித்திருப்பார்களேயானால் இப்படியொரு இழுக்கு ஏற்பட இடமளித்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இன்றைய பணமும் பதவியும் கலைஞரின் உழைப்பையும் திறனையும் மறைத்திருக்கிறது.
கறைபடிந்த கரங்களையும் பதவிப் பித்தர்களையும் உதறித்தள்ளி தி மு க தன் பயணத்தை தொடரவேண்டும்.
தந்தை பெரியார் வழியில் அண்ணா துவக்கிய இயக்கம் தமிழ் மண்ணுக்குத்தேவை.
 இது போன்ற தருணங்களில் கலைஞர் ஜாதிய ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்ற குரல் கேட்கிறது.
திரும்பிப்பாற்கிறேன். அணிவகுத்து கூச்சல் எழுப்பும் வரிசையில்...
தினமணி - விகடன் - கல்கி இதழ்கள் -- அரசியல் நோக்கராக பேசப்படும் துக்ளக் சோ -- ஊடகங்களில் உளரும் ஞாநி.
முன் நிலையில் இவர்களைக்காண நேருகிறது

-------------------------------------------------------------------
இடுகை 0033
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழியிடுங்கள் (comment )

Labels: , ,

8 Comments:

At 8 December 2010 at 10:13 , Anonymous bandhu said...

//பெரும்பாலும் இது போன்று குறைகள் சுட்டிக்காட்டப்பெரும் தணிக்கை அறிக்கைகளை அரசின் எந்தவொரு இலாக்காவும் இதுவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை என்பதுதான் உண்மை.//
அதனால் இப்போதும் இதை பற்றி கவலை படக்கூடாது என்கிறீர்களா?
//ஒவ்வொருமுறை மந்திரிசபை ஏற்படும்போதும் அல்லது விரிவாக்கப்படும்போதும் சம்மந்தப்பட்ட தலைகளின் தொலைபேசி உரையாடல்களை தொகுப்போமானால் விதம் விதமான துற்நாற்றங்களை நுகரமுடியும்.//
அப்படியா? இது வரை இது போன்ற தொலைபேசி உரையாடல்கள் ஒருமுறையாவது வெளி வந்துள்ளது உண்டா?
//கலைஞரின் வாரிசுகளே தமிழகத்தின் தனிப்பெரும் தலமைக்கு தீராத அவப் பெயரை தேடித்தந்திருக்கிறார்கள்//
//கறைபடிந்த கரங்களையும் பதவிப் பித்தர்களையும் உதறித்தள்ளி தி மு க தன் பயணத்தை தொடரவேண்டும்.//
அதாவது கருணாநிதியின் வாரிசுகளை உதறிவிட்டு தி மு க தன் பயணத்தை தொடரவேண்டும் என்கிறீர்களா?

 
At 9 December 2010 at 23:14 , Anonymous பாண்டியன்ஜி said...

வேர்களை கண்டு தங்கள் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன்.மிக்க நன்றி !
வேர்களில் அவ்வப்போது நான் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தும் முடிவானது என்றோ முழுதும் சரியானதென்றோ நான் கருதவில்லை.
அனைத்தும் மறுவிவதத்துக்குட்பட்டதாகவே கருதுகிறேன்.கருத்துக்களின் நிலையையுணர்ந்து ஏற்கவேண்டிய தருணங்களில் ஏற்றுக் கொள்வதில்
தவறேதும் இல்லை என்ற கருதுகிறேன்.
1 ) தணிக்கை அறிக்கைகள் , ரகசியமாக பதிவு செய்யப்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் இவைகளைப்பொறுத்தவரை பெரும்பாலும் நிகழுகின்ற
நடைமுறைகளைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.அவையனைத்தும் சரியானதென்றோ இன்று வெளிப்படுத்தும் முறை தேவையற்றதென்றோ எண்ணிட
வில்லை.இந்த நிகழ்வுகளையொட்டி ஒரு சிலர் எழுப்பும் கூச்சல்களையும் அவர்களது செயல்களின் உள்நோக்கங்களையும் அதனால் அவர்களுக்கேற்படும் மகிழ்வையுமே வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். பாராளுமன்றத்தின் மையமண்டபத்தில் கூடை கூடையாக கொட்டப்பெற்ற கரன்சி நோட்டுக்களை திரும்பத்திரும்ப தொலைக்காட்சியில் கண்டவர்கள் நாம்..கவலை கொள்ளவேண்டிய நேரங்களில் கவலைப்பட்டிருந்தால் மழை வந்த பிறகு குடையைத் தேடி அலையவேண்டிய அவசியம் நேரிட்டிருக்காது.. 2 ) இன்றைய சூழலில் கலை அரசியல் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் வாரிசுகளின் நுழைவு தவிற்க இயலாத ஒன்றாகி விட்டது. இயக்கத்தின் வளற்சிக்காக வாழ்வை அற்பணித்த எத்தனையோ தொண்டர்களை மதித்து அவர்தம் வாரிசுகளுக்கும் வாய்ப்பளிப்பதுண்டு.ஒவ்வொரு இயக்கத்திலும் தொண்டர்களிலிருந்து தலைவர்கள்வரை தங்கள் வரிசுகளை தாங்கள் இருக்கும்போதே தங்கள் சார்ந்த இயக்கங்களில் நுழைத்தே வந்திருக்கின்றனர். எண்ணிக்கையில் வேண்டுமானால் வித்தியாசம் காணப்படுமே தவிற வாரிசுகளின் நுழைவு அனைத்து இயக்கங்களுக்கும் ஒன்றேதான்.எனவே வாரிசுகளையும் இதர உருப்பினர்களையும் தனித்தனியே பார்க்க நான் முயலவில்லை..உருப்பினர்களைபபோல இயக்கத்தில் அவர்களது உழைப்பு, இயக்கத்தின் வளற்சிக்கு அவர்கள் எத்தனை பொறுப்பாகிறார்கள் என்பதையே எண்ணிப் பார்க்கவேண்டும்.வாரிச்களாயிருந்தாலும் இயக்கத் தொண்டர்களிடையே
எத்தனை பேருக்கு ஈர்ப்பு இருக்கிறதோஅவர்கள மட்டுமே நாளை நிலைத்து நிற்கமுடியும் என்பதை உணரவேண்டும்.மேலும் வாரிசுகளை வைத்திருப்பதையும் வெளியேற்றுவதையும் செய்யவேண்டியவர்கள் அந்தந்த இயக்கததைச் சார்ந்தவர்களே.
இதனைக்கருதியே பதவியையும் பணத்தையும் நேசிக்கிறவர்களை( மட்டும் ) உதறி பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்பிருக்கிறேன்.
கலைஞரும் இயகத்துக்கு என்ன நேருமோ என்று அஞ்சுவதைத் தவிர்த்து ஓய்வு பெற வேண்டும்..அவருடைய வயோதிகமே இயக்கத்துக்கு இன்று
மிகவும் பலவீனமாக இருக்கிறது. அண்ணாவுக்குப்பிறகு இந்திரா, ராஜீவ் இழப்பிற்கு பிறகு நிகழ்ந்ததைப்போல தி மு காவுக்கும் சிறந்த தலைமை கிட்டும்.

 
At 12 December 2010 at 20:40 , Anonymous Lakshmi said...

பாண்டியன் ஃபேஸ்புக்ல உங்கப்ளாக் பத்தி பாத்துட்டு இங்கவந்தேன். எனக்கு பாலிடிக்ஸ் பத்தி எதுவுமே புரியலை.அதனால கருத்துசொல்ல தெரியலை.சாரி.

 
At 12 December 2010 at 23:08 , Anonymous பாண்டியன்ஜி said...

லஷ்மி தாங்கட்கு,
அவ்வப்போது ஏற்படும் எண்ணச் சிதறல்களை வேர்களில் பதிவு செய்துவருகிறேன். அரசியல் மட்டுமின்றி அனைத்து துறை நிகழ்வுகளையும் வேர்கள்
பிரதிபலிக்கும்..உங்கள் ஓய்வில் வேர்களையும் திரும்பிப்பாருங்கள்.நன்றி

 
At 13 December 2010 at 19:47 , Anonymous karthi said...

appo neenga solratha partha kalaingar rompa nallavar vallavar apdi thane..
ithukku munbu intha alavukku periya Uzhal ethuvum nadakka villai nanba...
ungal kannottathil parthaal WIKILEAKES kooda thavarana oru web site endru solluvirkal polaye????

 
At 14 December 2010 at 22:59 , Anonymous பாண்டியன்ஜி said...

கார்த்திக்கு,
வேர்கள் வலைப்பூவுக்குள் நுழைந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு மகிழ்ச்சி.
1 ) நல்லவர் வல்லவர் என்ற சொற்கள் பெரும்பாலும் பயன்படுகின்ற இடங்களுக்குத்தக்கவாறு மாறுவது இயல்பு. கலைஞர் அவர்தம் குடும்பங்களுக்கும்,அவருடைய கழகத்துக்கும் அதன் தொண்டர்க்கும் நல்லவர் என்று சிலர் கருதலாம்.அரசு ஊழியர்,கலை,ஊடகம் மற்றும் பத்திரிக்கை சார்ந்த துறையினருக்கு அவர் சிலருக்கு நல்லவராக தோன்றக்கூடும். தமிழ் மண்ணுக்கும்,மொழிக்கும் அவர் நல்லவர் என்று சிலர் சொல்லுவதுண்டு.
அதுபோலவே அவருடைய 70 ஆண்டு பொதுவாழ்வு அவர் வல்லவரா அல்லவா என்பதை உணர்த்தக்கூடும்.
சோம்பிக்கிடந்த மக்களை சிலிர்த்தெழச்செய்த சுயமரியாதை இயக்கத்தின் மிச்சமிருக்கிற ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே என்பதை உணரவேண்டும்.
இந்திய அரசியலிலேயே மிக நெடிய வரலாறு கொண்ட கலைஞர் -
இந்த மண்ணுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கருதுகிறீர்களா ?
அவரை விடுத்து இந்த மண் வேறு யாரோடு பயணிக்க வேண்டுமென்று கருதுகிறீர்கள்? 2 ) ஸ்பெக்ட்ரம் ஊழல் நிகழவேயில்லை என்றோ திமுகாவினர் அத்தனை பேரும் உத்தமர்கள் என்றோ நான் எந்த இடத்திலும் எழுதவில்லை.மக்களிடையே ஊறி கிடக்கும் ஊழல் கலாச்சாரம் எந்தஅரசியல் இயக்கத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.
இதை தீர்மானிக்க,வெளிக்கொணர வருமானவரிச்சட்டங்கள் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இவற்றினாலேயே முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான். நீதிமன்ற நுழைவுக்குப் பிறகே இந்த ஊழல் உலகில் எத்தனை நீளமானதென்றோ அல்லது உயரமானதென்றோ அறியக்கூடும்.
இன்றையசூழலில் அலைக்கற்றைகளை இந்த விலைக்கு விற்காமல் இந்த விலைக்கு விற்கப்பட்டதில் இவ்வளவு தொகை இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றுமட்டுமே யூகத்தின் அடிப்படையில் தணிக்கை அறிக்கை பேசுகிறது. 1,76,000 கோடி கொள்ளை போயிருக்கிறது என்று எங்கேயும் சொல்லப்பட வில்லை.
22 நாட்களாக பாராளும் மன்றத்தின் செயல்பாடுகளை முடக்கிய ஊழலே அறியாதவர்கள் கேட்கின்ற அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர் குழு விசாரணை எந்த அளவுக்கு பலன் தரும் என்று கருதுகிறீர்கள்?இதுவரை நான்குமுறை கூடி விவாதித்த ,அவர்கள் கேட்கின்ற குழு எந்தமுடிவுகளையும் எட்டப்படாமல் குழப்பத்தோடு முடிந்ததை காணவில்லையா? அனைத்துஉறுப்பினர்களும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்ல ஒருவருக்கோருவர் அசிங்கப்படுத்தி ஆதாயம் தேட மட்டுமே பயன்பட்டிருக்கிறது.
3 ) பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அரசின் ஊழல்களை வெளிப்படுத்த அனைத்து நிலைகளிலும் ஊடுருவுவதை தவரென்று நான் என்றுமே கருதியதில்லை. விக்கிலீக் அசாங்கேயின் சமீபத்திய செய்ல்பாடுகளையும் அப்படிதான் பார்க்கிறேன்.
அதைவிடுத்து யூகங்களை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை வரைவதையும் தனிப்பட்டோர் தகவல்களை அசாங்கேயின் ஆரம்பகால செயல்களைப்போல் அபகரிப்பதும் பொதுவாழ்வில் பல்வேறு நிலைகளில் தோல்வியை சுமந்த ஊழல் பேர்வழிகளுக்கு மட்டுமே துணையாக அமையும் என்பதை உணர வேண்டும்.

 
At 15 December 2010 at 07:30 , Anonymous lakshu said...

super sir nice article..

 
At 17 December 2010 at 04:20 , Anonymous பாண்டியன்ஜி said...

welcome for your visit. many thanks.please advice
to improve the site

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home