முடிந்துபோன 34 வது புத்தகச்சந்தை
ஜனவரி 04 முதல் 17 வரை சென்னையில் நிகழ்ந்த 34 வது புததகச் சந்தை ஒரு அகற்ற முடியாத அநுபவம்.அச்சுக் கலையின் அசுர வளற்சிக்கு ஈடு
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாக பிரமிக்கத்தக்க வகையில் வெற்றிகரமாக நிகழ்ந்து வரும்
34 வது சென்னை புத்தகக் காட்சியை
இந்த ஞாயிற்றுக்கிழமைதான் காண நேரிட்டது. நவம்பர் டிசம்பர் மாதத் துவக்கத்திலேயே இந்த புத்தகக்காட்சி எனக்குள் ஒருவித மனக்கிளற்சியை ஏற்படுத்தியிருந்தது.இருந்த போதிலும் எனக்கேற்பட்ட தவிற்க இயலாத பயணங்கள் இந்த கடைசி கட்ட வாய்ப்புக்குத்தான் வழி வகுத்தது.சரியாக நான்கு மணியளவில் பச்சையப்பன் கல்லூரி வளாகத்துக்கெதிரில் இருந்த பேரூந்து நிருத்தத்தில் இறங்கியபோது என்னை அறியாமலேயே என் கண்கள் வியப்பால் விரிந்தது. சாலையின் இரு மருங்கிலும் திரளான மக்கள் வெள்ளம் குறுக்கும் நெடுக்குமாக அலைமோதுவதைக் காண முடிந்தது.தார்ச்சாலையிலிருந்து காட்சி அரங்குவரை இருபுரமும் வானுயர கட் அவுட்கள்
நிறுத்தப்பட்டிருந்தன.எப்போதுமே படைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நம் எழுத்துலகசிற்பிகள் இன்று வெட்ட வெளியில் இருபுரமும் உயர்ந்து நின்று வரவேற்ற காட்சி மனதிற்கு பெரிதும் நிறைவைக் கொடுத்தது.தமிழர் திருநாள் சிறப்புற கொண்டாடப்படும் இத்தருணத்திலும் வழி நெடுக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் நிறைந்து காணப்பட்டது வாசிப்பு உலகில் மிகுந்தநம்பிக்கையை ஏற்படுத்தியது. ( புத்தகங்களைப் படிப்பது அப்பரம் ஆகட்டும்! )
சந்தையின் நுழைவாயிலுக்கருகில் ஏராளமான இருக்கைகளுடன் மிகப்பெரிய அரங்கம் ஒன்றும் அமைத்து தினந்தினம் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் அரங்கோறிக்கொண்டிருந்தன. அவ்வப்போது இன்றைய நவீன எழுத்தாளர்களின் எழுத்துக்களும்அவசரம் அவசரமாக அறிமுகம் செய்யப்பட்டன. நான் சென்றபோது நாளின் இருபத்திநாலு மணிநேரமும் தான் எப்படி உழைக்க நேரிட்டிருக்கிறது என்பதை வழக்கம்போலவே இந்தமேடையிலும் சொல்லிக் கொண்டிருந்தார் தினமணி ஆசிரியர் திரு வைத்திநாதன்.சமீப காலங்களில் அவர் கலந்துகொள்ளாத இலக்கிய நிகழ்வுகள் இல்லையென்றே நினைக்கிறேன்.அரங்குக்கருகில் அத்தனை கூட்டத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் சிற்றுண்டி விடுதியும் குளிர் பான கடைகளும் நிறைந்து காணப்பட்டன. கழிவறை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறைவாக செய்யப்பட்டிருந்தன.
சந்தைக்குள் நூழைந்தால் ஏறத்தாழ 450 அரங்குகளுக்கு மேல் இடம் பெற்று ஒரு கணம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு அரங்கிலும் நேர்த்தியாக அச்சிடப்பெற்ற ஏராளமான புத்தகங்கள் கொட்டிக்கிடப்பதைக்காண முடிந்தது.அத்தனை அரங்கிலும் வாசகர்கள் எதையெதையோ தேடிக்கொண்டிருப்பதைக்காணமுடிந்தது.ஒவ்வொரு அரங்கும் அழகுற அமைக்கப்பட்டு பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது.பெரும்பாலும் காலியாக இருந்த அரங்குகளே இல்லையென்று நினைக்கிறேன். அய்ம்பது அறுபதுகளில் உச்சத்திலிருந்த எழுத்துலக சிற்பிகளின் சாகாவரம் பெற்ற படைப்புகள் அனைத்தும் மறுபிறவி பெற்று இன்றும் முதல் வரிசையில் இடம் பெற்றிருந்தன.இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுக்கலையின் அசுரவளற்சியில் தங்கள் எழுத்துக்கள் மின்னுவதை காணக் கொடுத்து வைக்காதவர்கள் என்று உணரும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. உலக இலக்கியங்கள்,வரலாற்று ஆவணங்கள்,சங்க இலக்கியங்கள், சமய சார்ந்த படைப்புகள் ,ஆத்தீக நாத்தீக விவாதங்கள்,நவீன தொழில்நுட்ப நூல்கள் என்று காணுகிற திசையனைத்திலும் படைப்புகள் பார்வையை செலுத்தியிருப்பது வியக்கத்தக்கதாய் இருந்தது.குழந்தை இலக்கியமும் புதுக்கவிதையும் எடுத்திருந்த விசுவ ரூபம் பெரும்பாலான அரங்குகளில் உணரமுடிகிறது. பல்வேறு அரங்குகளில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பயனளிக்கும் புத்தகங்கள் பெருமளவில் காணப்பட்டன.மொழி,கல்வி சார்ந்த குறுந்தகடுகளும் மொழியைக்கையாள தேவையான மென் பொருள்களும் அரங்கின் ஆங்காங்கே இறைந்து கிடந்தன. பெரும்பாலான பதிப்பகங்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இந்த சந்தைக்கு தயாராகி விட்டிருந்ததைக் அறிந்திருக்கிறேன். நவீன எழுத்தாளர்களின் தரமான எழுத்துக்கள் இந்த பதிப்பகங்களின் பசிக்கு போதுமானதாக இருக்க வில்லை. அந்த நாளைய எழுத்தாளர்களின் படைப்புகளை புத்தகமாக்கிய பின்னும் அவர்கள் அவ்வப்போது நிகழ்த்த நேர்ந்த அவதூறு அரட்டைகளையும் அவர்களுடைய தனிப்பட்ட குடும்பம் சார்ந்த கடிதங்களையும் இலக்கியத்திறனாய்வு மற்றும் கடித இலக்கியம் என்று வகைப்படுத்தி காசாக்கமுயன்றதையும் காணமுடிந்தது.ஏடுகளில் எழுதியவை மட்டுமின்றி பொது
மேடைகளிலும் ஊடகங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திய சொற்களையும் தொகுத்து விற்பனைக்கு வைத்திருந்ததை பார்த்தேன். பல் வேறு நூல்களுக்கு வெவ்வேறு காலங்களில்வழங்கப்பெற்ற அணிந்துறைகளையும் கூடவிட்டுவைக்கவில்லை. அவைகளையும் புத்தகங்களாக மாற்றி அடுக்கி வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் கவர்ச்சி முலாம் பூச இன்நாளைய அச்சுக்கலையின் அசுர வளற்சி பெரிதும் பயன் பட்டிருந்தது.
பழம்பெரும் எழுத்துச்சிற்பி திரு. கி.ராஜநாராயணனுடன்.. |
ஒருசில பதிப்பகங்கள் ஒரு காலத்திய ஜெமினி கதை இலாக்கா ,தேவர் பிலிம்ஸ் கதை இலாக்கா போன்று ஆசிரியர் குழு அமைத்து அயல் மொழி ஆக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி நூல்களை வெளியிட்டதன்மூலம் நவீன எழுத்தாளர்களுக்கு தவறான பாதையையே காட்டியிருக்கிறார்கள். இதுவும் ஒருவகையான சுரண்டல் என்பதை உணரவேண்டும்.
அனைத்து அரங்குகளையும் முழுமையாக நுகர போதுமான காலம் இல்லாமற் போய்விட்டது. விருப்பமின்றி நகர்கிறேன்.இடையிலே பழம் பெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணனையும் மின்வாரிய நண்பர்கள் சிலரையும் சந்திக்ககூடிய சந்தர்பம் கிடைத்தது.
அரங்குகளையும் முழுமையாக நுகர போதுமான காலம் இல்லாமற் போய்விட்டது. விருப்பமின்றி நகர்கிறேன்.அரங்குக்கு வெளியே வியப்பு காத்திருக்கிறது.அரங்கின் எதிர் சாலையோரத்தில் நீண்டு நெடிய வரிசையில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கிறது.அங்கேயும்
வாசகர்கள் எதையெதையோ தேடி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது.
யானைக்கு உணவளிக்கும் போது சிதறி விழும் உணவுப்பருக்கைகள் பெரும்பாலான ஜீவன்களுக்கும் உணவாகக்கூடும் என்று கேட்டிருக்கிறேன். அது போல இந்த சாலையோர திருவல்லிக்கேணி புத்தக
வியாபாரிகளிடமும் புத்தகவிற்பனை நிகழ்ந்ததைக் காணமுடிந்தது.
மூன்று வரலாற்று மொழி பெயற்புகளையும்,பாவேந்தர் டிகேசி புதினங்களையும் தேடி எடுத்துக்கொண்டு திரும்புகிறேன்.
ஏதோ என்னவென்று புரியாத மனக்குறையோடு பேரூந்தில் திரும்புகிறேன். இந்த 34 வது சந்தை இந்தமுறையும் நம்பிக்கையளிக்கும் திசையிலேயே பயணிப்பதை உணர்கிறேன்
அச்சுத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் அசுற எழுச்சி இதை சாத்தியமாக்கியிருப்பதாகவே எண்ணுகிறேன்.வாசகர் ஆயுளை தொடர்ந்து விழுங்கும் தொலைக்காட்சி மற்றும் கணினியின் தாக்கங்களிலிருந்து மக்களை ஒருவாறு மீட்டெடுக்க உதவியிருப்பதைக் காணமுடிகிறது.
சந்தையில் காணப்பட்ட பெரும்பாலானபுத்தகங்கள்இவ்வுலகின் அனைத்து திசைகளிலும் பார்வையை செலுத்தியிருப்பது மகிழ்வுக்குரியது .ஏராளமான மொழிமாற்ற புத்தகங்கள் இடம் பெற்று கவி பாரதியின் கனவை மெய்பட வைத்திருக்கிறது.இருந்த போதிலும் -
மணிக்கொடி காலத்திய எழுத்துலக சிற்பிகள், அம்பது அறுபதில் தடம் பதித்த பேனா வித்தகர்கள் படைப்புகளே இன்றும் முதல் வரிசையில் இடம்பிடித்திருப்பதைக்காணமுடிகிறது. கல்கி நா.பா, ஜெயகாந்தன் படைப்புகளை விஞ்சி நிற்க இன்னும் யாரும் முயலவில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய எழுத்துலகில் கணக்கிலடங்கா புதுப்புது எழுத்தாளர்கள் காணப்பெரினும் நெஞ்சில் நிற்போர் ஒரு சிலரே. 34 வது புத்தக காட்சி பிரமிக்கத்தக்க கூட்டத்தை கூட்ட முடிந்த போதும் வாசகர்கள் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போனதை நான் பார்க்கவில்லை. ஆங்காங்கே பொறுக்கிக்கொண்டு சென்றதைதான் காணமுடிந்தது. இன்றைய எழுத்துலகில் கணக்கிலடங்கா புதுப்புது எழுத்தாளர்கள் காணப்பெரினும் நெஞ்சில் நிற்போர் ஒரு சிலரே. அய்ம்பது அறுபதுகளில் நிகழ்த்தப்பட்ட எழுத்துலக சாதனைகள் இன்னும் அப்படியே இருப்பதகவே நினைக்கிறேன்.
---------------------------------
புத்தகம் பதிப்பகம் என்று எழுதும் போது என் நெஞ்சில் நிழலாக ஆடும் ஒரு நிகழ்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அய்ம்பது அறுபதுகளில் எழுத்துச் சிற்பிகள் கொடி கட்டி பறந்ததென்னவோ உண்மைதான்.வாசகர்களின் வாசிப்பு ருசியும் உச்சத்திலேயே இருந்தது.இருந்தபோதும் படைப்பாளிகளும் பதிப்பாளிகளும் பஞ்சத்தில்தான் உழன்றார்கள்.எழுத்தாளர்களுடைய சன்மானத் தொகையை ஆனந்தவிகடன் வாசனே முதல்முதலில் உயர்த்தி கொடுத்ததை பார்த்திருக்கிறேன்.
ஒரு சமயம் நகைச்சுவை பேச்சாளரும் பதிப்பாளர்களின் முன்னோடி என்று கருதப்பட்ட அரசியல் பிரமுகர் சின்ன அண்ணாமலை ஆரம்ப நாட்களில் மூதறிஞர் ராஜாஜியை சந்திக்கிறார்.
இப்ப என்ன செய்ற..
தமிழ் பண்ணை பதிப்பகம் நடத்துறேன்
அதெல்லாம் சரி ! பூவாவுக்கு என்ன பண்ற.. - என்கிறார் ராஜாஜி.
-- அன்நாளைய எழுத்துலகின் ஜீவநாடி இப்போது புரியக்கூடும்.
சென்னையிலிருந்து....பாண்டியன்ஜி
இடுகை 0038.
2 Comments:
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
தொடர்ந்து தாங்கள் செலுத்தும் பார்வைக்கும் மறுமொழிக்கும் நன்றி!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home