Sunday, 4 July 2010

வன்னியடியில் ஒரு சந்திப்பு !

  ( தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த வன்னியடி கிராமம் )         

                                                              பாண்டியன்ஜி
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன் தமிழ் நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று
இன்று பல்வேறு திசைகளில் வாழ்ந்துவரும் அய்ந்து நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க எண்ணியபோது இனிய நண்பர் ஜெகநாதன் ' அந்த சந்திப்பை இங்கேயே (தஞ்சை மாவட்டம்
பாபநாசத்தைச் சேர்ந்த வன்னியடி கிராமம் ) வைத்துக் கொள்ளலாமே ' என்று அன்போடு அழைத்தபோது மூலைக்கு ஒருவராய் பிரிந்து வாழும் நாங்கள் ஒருவழியாக ஜுன் 29, 30 ல்
வன்னியடியில் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
ஜுன் 29 காலை கும்பகோணத்தில் இறங்கிய என்னோடு திருவாரூரைச் சேர்ந்த நண்பர் குமரசாமி இணைந்து கொண்டார். சென்னையிலிருந்து வேதசிரோன்மணியும் ஈரோட்டிலிருந்து தங்கவேலு மற்றும் பழனிச்சாமியும் முன்னதாக வன்னியடி வந்திருந்தனர்.
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் குறுக்கிடும் பாபநாசத்தில் இறங்கி புளியமரத்து
தேநீர் கடை அருகில் வடக்கு நோக்கி நீண்டு செல்லும் தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் கடக்கும் போது அரசலாற்று பாலம் குறுக்கிடுகிறது. ஆற்றின் தென்கரையில் மேற்கு நோக்கி
செல்லும் குறுகிய தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் தாண்டி தென்திசையில் அரை கிலோமீட்டர் பயணித்தால் பசுமைப்பிரதேசம் வன்னியடியை அடையலாம்.
எதிரே குறுக்கிட்ட அரசு உயர் நிலைப் பள்ளியில் அத்தனை சிறார்களும் வரிசையாக அணிவகுத்து இசைக்கின்ற தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளியின் இயல்பான துவக்கத்தை வெளிப்படுத்துகிறது. தாமதத்தோடு வந்த குழந்தைகள் ஒருவித அச்சத்தோடு ஒதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. இரண்டு மூன்று தெருக்களை கடந்து ஜெகன்நாதன் வீட்டை அடைந்தபோது அன்பான வரவேற்பு நிகழ்ந்தது. எங்களுக்காக ஜெகன்நாதன் ஒதுக்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அன்பான நண்பர்களை நீண்டநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவரும் மின்வாரியத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முழு
ஈடுபாட்டுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்தாம். பணிக்காலங்களில் முக்கியமாக காலந்தவறாமை , கிடைத்த பணியில் உள்ளார்ந்த ஈடுபாடு ஞாயமான ஊதியம் இவைமட்டுமே உயர்வாக கருதியவர்கள். இன்று துறைதோரும் மலிந்து கிடக்கும் ஊழலில் இருந்து பெரிதும் ஒதுங்கியிருந்தவர்கள் .
ஈரோடு நகரிலிருந்து தங்கவேலு வந்திருந்தது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியளித்தது. 68 களில் ஈரோட்டில் பணியில் இணைந்தபோது நான் பெற்ற நட்பு அது. நீறு பூத்த நெருப்பாக ஆண்டாண்டுகளாய் தொடர்வது நான் பெற்ற பேரேயாகும். வெளிப்படையான செய்கைகள், காலந்தவறாமை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பணிகளை முடிக்கும் திறன் எப்போதும் பளிச்சென்று காணப்பெறும் தெளிவான தோற்றம் லேசாக வெளிப்படும் கோவைத்தமிழ் இவைதான் தங்கவேலு. பின்னாளில் மோட்டாரில் இயங்கும் கருவிகளுக்குத் தேவையான பேரிங் வணிகத்தில் ஈரோடு நகரத்தில் சாதனை நிகழ்த்தியவர். இன்று வணிகத்துறையிலிருந்து முற்றிலும் விலகி ஆன்மீக நிகழ்வுகளிலும் அரிமா இயக்கத்தின் மூலம் சமூகபணிகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். நட்புக்காக என்றுமே நேரம் ஒதுக்க தயங்காதவர்.அவரோடு வந்த பழனிச்சாமி எங்கள் பணிக்காலங்களில் எங்களுக்கெல்லாம் துணையாகவும் தூணாகவும் வாழ்ந்தவர். என்றும் இனிய முகத்தோடு இனியசொற்களோடு காணப்பெரும் பழனிச்சாமி இன்றும் அப்படியே இருப்பது என்னை
நெகிழ வைத்த ஒன்று.
என்னோடு வந்த குமரசாமி திருவாரூரை அடுத்த சிக்கலைச் சேர்ந்தவர் பகுத்தறிவுச்சிந்தனையில் ஊறிய பரம்பரை. பணியிலும் சரி சூழ்ந்திருப்போர் வாழ்விலும் சரி எதிர்படும் சிக்கல்களை களைவதில் முன் நிற்பவர். எங்களுக்கெல்லாம் பணிக் காலத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர். தனக்கேற்ற சிந்தனைகளில் மன உறுதி மிக்கவர். இன்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பலருக்கு துணையாக வாழ்பவர்.
நண்பர் வேதசிரோன்மணி திருச்சியில் எனக்கு அறிமுகமானவர். மணி மணியான கையெழுத்துக்கு சொந்தமானவர். சுப்ரமணிய பாரதியின் எழுத்துக்களை அவர் இசைக்கும்போது கேட்க வேண்டும். அத்தனை இனிமையான குரல் வளம்.
இயல்பாகவே தன் கருத்துக்களை எடுத்து வைக்கும்போது அவரது குரலும் அதற்கேற்ப மாறுகின்ற முகமும் அவரைப் பின்னாளில் ஒரு கிருத்துவமத போதகராய் உருவெடுக்க உதவியிருக்கக்கூடும். இன்று தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளை தியாகத்திருமகன் ஏசுவின் நெறி பரப்பும் பணியை மேற்கொண்டிருப்பது மகிழ்வுக்குரியதே !
எங்களை விருந்துக்கழைத்த ஜெகநாதன் -
எங்களில் பெரிதும் மாறுபட்டவர். 66 களில் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் இணைந்தபோது அறிமுகமாகி பின்னாளில் மின்வாரிய பணியிலும் இறுதிவரை என்னோடு பணியாற்றியவர். நெஞ்சில் உறுதியும் நேர்மைத்திறனும் நிறம்பப் பெற்றவர். பணியில் தீவிர ஈடுபாடு , காலந்தவறாமை , நேர்மையான பொறியாளர்களிடம் மிகுந்த பணிவு இவையனைத்தும் இவருக்கு சொந்தமானவை. இக்கட்டான சூழலில் எடுக்கின்ற முடிவுகளில் இருந்து எள்ளளவும் மாறாதவர். பின் விளைவுகளை கண்டு எடுத்த முடிவுகளில் இருந்து மாறாத மன உறுதி மிகுந்தவர்.
அவரது மனைவியும் மூத்தமகளும் இரண்டு நாட்க்கள் தலைவாழை இலையில் உணவளித்து உபசரித்தது தஞ்சை மண்ணின் விருந்தோம்பல் இன்னும் மறக்கப்படவில்லை என்பதையே எங்களுக்கு உணர்த்தியது. இந்த இரண்டு நாட்களில் என்றோ நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளையும் தற்கால சூழல்களையும் ஒருசேர அசை போட்டது இனிமையானது.
கர்நாடகாவில் பிறந்து தமிழ் மண்ணில் பாய்கின்ற காவிரி இந்த மண் செழிப்புற ஒவ்வொரு இடங்களிலும் கிளைநதிகளை உருவாக்கிவிட்டு தொடர்ந்து வங்கக்கடலை நோக்கி பயணம் செய்வது இனிமையானது. ஏறக்குறைய நான்குக்கு மேற்பட்ட கிளை நதிகள் பிரிந்து செல்லும் பாக்கியத்தைப் பெற்றது வன்னியடி கிராமம். தஞ்சையின் பெரும்பகுதி வரட்ச்சியின் பிடியில்
சிக்கித் தவிக்கும் போதும் வன்னியடி பசுமையாகவே காட்ச்சி தருகிறது. வாழை , கரும்பு , கருணை என்று பல்வேறு பயிர்வகைகள் வன்னியடிக்கு சிறப்பு சேர்க்கிறது.

ஆனந்த நடனமாடும் மயில்களும் பழந்தின்னி வவ்வால்களும் நிறைந்து காணப்படுவது வன்னியடியின் பசுமைக்கு சாட்சி !. மொத்தத்தில் பெருநகரங்களுக்கிணையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு சின்னஞ்சிறு கிராமம் வன்னியடி.
16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாதன் கட்டிய 36 அடி உயர தானியக்காப்பகத்தை பாபநாசம் சிவன் கோயில் வளாகத்தில் காணநேர்ந்தது. மெல்லிய செங்கற்களையும் சுண்ணாம்புக்காரைகளையும் கொண்டு கட்டப்பெற்ற அந்த கிடங்கு 3000 கலம் தானியங்களை சேமிக்க வல்லது. இன்று தொல் பொருள் இலாக்கா கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாலை நேரங்களில் கும்பகோணம் மகாமக குளக்கரையில் சுற்றிவந்தது மறக்கமுடியாதது. இந்த சந்திப்பில் வேலூரைச்சேர்ந்த திருவலம் டி.ராஜேந்திரன் கலந்து கொள்ளாமற் போனது எதிர்பாராதது.கோவையில் நிகழ்ந்த செம்மொழி மகாநாட்டைபோல்பல்வேறுசிந்தனைகளையும் விதைத்துவிட்டு ஜுலை30மாலை

அனைவரிடமும் விடைபெற்று கொண்டு மாறுபட்ட திசைகளில பயணப்பட்டோம்.
இறுதியில் நாங்கள் அறிய நேர்ந்த செய்தி நண்பர் ஜெகநாதன் எங்களில் எத்தனை வித்தியாசமானவர் என்பதை உறுதி செய்தது.
ஜுன் 28 அன்று அவரது தாயார் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுதான் அந்த தகவல். அகத்தின் துயரை முகத்தில் சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாடகள் எங்களோடு .....
என்னால் என்றுமே இயலாத ஒன்று.
அவரது தாயார் துயரிலிருந்து விடுபட்டு பிணியின்றி நீண்டு வாழவேண்டும் !
வன்னியடியை விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
ஆன்மீகத்தில் என் நம்பிக்கையின்மையை கருத்தில் கொண்டு 'காலம் உங்களுக்கு கற்பிக்கும் ' என்று மணி குறிப்பிட்ட சொற்கள் என் நெஞ்சில் நிழலாக ஆடியது . காலம் கருத்துக்களை திருத்தவும் கூடும் என்று சொல்லத் தோன்றியது.

தன்னுடைய கவனக்குறைவாலும் தவறான வழிகளாலும் எதிர்படும் துயரங்கள் மனிதனின் கருத்துக்களை மாற்றுவது உண்மையே. குறுகிய நோக்கங்களுக்கு நன் நெறி போதனைகளை பயன்படுத்துவதை அறியும்போது உணர மறுப்பவர்களுக்கு எப்படித்தான் உணர்த்துவது.
--------------------------------------------
இடுகை 0025
            


Labels:

12 Comments:

At 4 July 2010 at 06:04 , Anonymous ராம்ஜி_யாஹூ said...

very nice & inspirational post, Many thanks for sharing.

 
At 4 July 2010 at 06:16 , Anonymous கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல சந்திப்பு, தன் மன இறுக்கத்தை தாயாரை பற்றிய நினைப்பை வெளிக்காட்டாது இருந்த நண்பர் எத்தனை அற்புதமானவர்..

 
At 4 July 2010 at 06:29 , Anonymous Thekkikattan|தெகா said...

அய்யா, அருமையான பகிர்வு! பத்து வருட பிரிவிற்குப் பிறகு இப்படியான ஒரு சூழலில் ஒரு ரீ-யூனியன்... ம்ம்ம்!!

//அகத்தின் துயரை முகத்தில் சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாடகள் எங்களோடு.....//

வாவ்!!

 
At 4 July 2010 at 06:35 , Anonymous Thekkikattan|தெகா said...

உங்க ப்ரோஃபைலிலிருந்து எடுத்தது:

//பணியில இருந்து விடுபட்டு தனியாக நின்றபோது எங்கோ தொலைத்துவிட்டு வந்த என் நிறைவேறாத கனவுகளை தேடத்துவங்கினேன்.//

கண்டிப்பாக இதனைப் பற்றி நீங்க நிறைய எழுதணும்... கனவுகளை தொலைத்துக் கொண்டிருந்த அந்த நாட்களினூடாக எது போன்ற எண்ணங்கள் அதன் பொருட்டு இருந்தது என்பது பற்றியும்.

// அதன் விளைவு – வேர்கள் பிறந்தது.//

நிறைய தமிழக ஊர்களைச் சுற்றிய அனுபவமும், அந்த ஊருக்கான மண்ணியல்பும் அவதானிக்கும் வாய்ப்பும் நிறைய கிடைத்திருக்கக் கூடும்தானே, வெளியே எடுத்து விடுங்க, படிப்போம். நன்றி!!

 
At 4 July 2010 at 11:51 , Anonymous பாண்டியன்ஜி said...

இனிய நண்பர்களுக்கு நன்றி !
திரு. கே.ஆர்.பி செந்தில்
திரு.ராம்ஜி யாஹு
திரு.தெ.க
இத்தனை விரைவாக வேர்கள் உங்களை எட்டும் என்று எதிர் பார்க்கவில்லை.உங்கள் நட்ப்பை நேசிக்கிறேன்.
பாண்டியன்ஜி
pandiangee@gmail.com

 
At 7 July 2010 at 20:59 , Anonymous Sangeetha said...

Dear Uncle, I read your blog and in particular, I read your narration about your visit to my Parent's place Vanniyadi. While reading your narration, I felt as if I was there in Vanniyadi. I would like to thank you and all of my dad's other friends who visited my parents in Vanniyadi. When I spoke to my dad after your visit, he told me that he was very very happy about your visit. Something that my dad will remember for the rest of his life. Once again, I would like to thank all of you for your visit and also for sharing your experience in your blog. I would encourage all of you to do this get together atleast once every year.

Anbudan,
Sangeetha Jaganathan

 
At 8 July 2010 at 21:58 , Anonymous asokan.t said...

Dear Uncle,
Vanakkam. Let me introduce as son of the eldest sister of Mr. C. Jaganathan, presently working as a Central Govt. Officer at Trichi. He was the inspiration behind me for my growth. Thanks for taking me to Vanniyadi.
I was one of the students of that high school in 1965-67(10th and 11th of my school finals.)

A news: My grand mother is fine now.Thanks for your good wishes.

If you kindly permit me, I have a few requests:
1. pl. use the tamil initials in your name.
2. you and your friends met on June,29th. In the blog, it is written as July,29.

Pl. keep it up.

I have become a fan of you. may be you will get more comments.

Asokan.T
09.07.2010

 
At 11 July 2010 at 06:15 , Anonymous பாண்டியன்ஜி said...

அன்பு சங்கீதாவுக்கு ,
வேர்களை பார்வையிட்டு மறுமொழி எழுதியதற்கு நன்றி.
இன்று வரண்டு போயிருக்கும் தஞ்சை மாவட்டத்தில் மிச்சமிருக்கும் ஈரப்பிரதேசமான வன்னியடியில் இரண்டு நாட்கள் இளைப்பாறி திரும்பும்போது
உன் தாயாரும் சகோதரியும் உன் தந்தையுடன் ஓடியோடி உபசரித்ததை எண்ணிப்பார்க்கிறேன். உண்மையில் நானே நன்றி சொல்லவேண்டும்..
நல் வாழ்த்துக்கள் !
-------------------------
அன்பார்ந்த அசோகன் ,
ஓரளவு உங்களை முன்பே அறிவேன் . இன்றைய சூழலில் --
வலைப்பூவுக்கும் தமிழ் எழுத்துக்கும் சற்று புதியவன். என் பதிவில் ஏற்பட்ட தலையாய பிழையை உணர்த்தியதற்கு நன்றி. அடுத்து--
மொழி என்பது இனத்தின் அடையாளமாகவும் பெயர் என்பது இடத்திற்கோ பொருளுக்கோ உயிரினங்களுக்கோ ஒரு அடையாளம் என்றே
கருதுகிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்குமே தமிழ் பெயர்கள்தாம். என்னுடைய பழமையான தனித்தமிழ் புனை பெயர்களை இன்று
ஜெகநாதன் போன்றோர் மட்டுமே அறியக்கூடும். ஏறத்தாழ 30 வருட இடைவெளியில் அரசுப் பணியில் இருந்தபோது பாண்டியன்ஜி என்றே
அடையாளம் காணப்பட்டவன்.இப்போது ஜி யைத் திருத்துவதன்மூலம் என் நண்ப்களிடையே நான் வேறுபடக்கூடும் என்தைத்தவிற வேறு
ஒன்றுமில்லை. தங்கள் மேலான ஆசையும் எனக்குண்டு.
பாண்டியன்ஜ
சென்னையிலிருந்து.... .

 
At 12 July 2010 at 22:59 , Anonymous Gunaseelan said...

Dear Uncle,

Let me introduce myself. I am son of the younger brother of Mr.C.Jaganathan. I read your blog. It is wonderful. Now I am away from my native place. While reading your blog, I felt like I was at Vanniyadi for those 2 days. Thank you for visiting Vanniyadi and taking this small village to the world by web.

My periappa(Mr.C.Jaganathan) always think differently in everything and make the environment lively. I am very much impressed with his gardening work.
I believe for sure in future you will get-together at Vanniyadi every year with some more friends.

Gunaseelan
gunasam@gmail.com

 
At 14 August 2010 at 00:25 , Anonymous பாண்டியன்ஜி said...

அன்பு குணசீலனுக்கு,
உங்கள் மறுமொழிக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
இனிய....பாண்டியன்ஜி

 
At 18 August 2010 at 06:45 , Anonymous Anitha M said...

Dear Uncle,
Vanakkam. I read your blog.very nice. Your post took me to Vanniyadi to my Uncle's house.

My Uncle is a unique person in all aspects of life, thinking and ideologies which I admire.
I love my aunt's traditional cooking and flair. I miss them very much.

I'm glad you and your friends enjoyed the traditional Thanjavur hospitality and hope you have lot more get-togethrs in the future.
Keep up your good work in the blog.
Best Wishes.

Anitha M

 
At 21 August 2010 at 02:32 , Anonymous பாண்டியன்ஜி said...

அநிதாவுக்கு ,
வேர்கள் வலைப்பூவை பார்த்து மறுமொழி எழுதியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.அவ்வப்போது நான் சந்திக்கின்ற நிகழ்வுகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.பாண்டியன்ஜி pangee@rediffmail.com

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home