Wednesday, 10 March 2010

வலைக்கூச்சலை நிறுத்துங்கள்

விரும்பியோ விரும்பாமலோ ஈழத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டாயிற்று.
உலகெங்குமிருந்து கிடைத்த அபரிதமான செல்வாக்கையும் உணர்வுபூர்வமாக கிடைத்த அசுரபலத்தையும் தங்கள் சகோதர சண்டையால் ஒருசேர போட்டு உடைத்தாயிற்று.
மிச்சமிருக்கும் சொச்ச தமிழர்களுக்காவது வாழ்வு விடியாதா என்று பார்க்கவேண்டும்.அன்னிய மண்ணில் அகதிகளாக சிதறுண்டு
கிடக்கும் ஈழத்தமிழினம் சொந்தமண்ணில் குடியேறுவதர்க்கு வழி பற்றி யோசிக்கவேண்டும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தன்னார்வ நிறுவனங்களும் இவற்றுக்கெல்லாம் துணையிருப்பார்கள் என்று தோன்றவில்லை.இவர்களிடையே உலவும் முரண்பட்ட கருத்துகளும் மாறுபட்ட வழிகளும் என்றுமே ஈழ மக்களுக்கு பயனளிக்கப்போவதில்லை.
ஒவ்வொருவரும் ஈழக் கொடுமைகளுக்கிடையே குளிர் காய்வதில் முன்னிற்கின்றனர்.
ஈழப்போரின்போது ராணுவத்தை அனுப்பு என்ற கூச்சலிலும் சரி, சண்டைக்களத்தில் தேவையான அத்தியாவசியமான உணவு உடை மருந்து போன்ற பொருள்களை அனுப்புவதிலும் சரி இங்குள்ள தமிழர் என்றுமே ஒருமித்த கருத்தை எட்டியதில்லை.இவர்களுடைய
இது போன்ற செயல்கள் பெரும்பாலும் ஈழப்போரில் எண்ணையையே தெளித்திருக்கிறது.மாறி மாறி முரண் பட்டு ஒலிக்கின்ற இது
போன்ற குரல்களை நடுவண அரசும் செவிமடுத்ததில்லை.
இப்போதும் பிரபாகரன் தாயார் மருத்துவ பயணத்திலும் இக்கட்சிகளின் முதிர்ச்சியற்ற செயல்களே நிகழ்ந்திருக்கின்றன.நமக்கென்றுமே
முறண்பட்டு செயல்படுகிற பாக்கிஸ்த்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகிற எவரையும் அரசு தடுத்ததில்லை.பார்வதி அம்மாள் பயணத்தில் சிக்கல் இருப்பதை அறிந்தோர் கூடி சிக்கலை களைய முயன்றிருக்கவேண்டும்.நள்ளிரவில் நிகழ்ந்த
நிகழ்வுகளுக்கு காலையில் காகங்கள் போல் குரல் கொடுப்பதை விடுத்து கூடி ஆலோசித்து அம்மையாரை சிகிச்சைக்கு திரும்ப அழைக்கவேண்டும்.
அதை விடுத்து -
வலைக்கூச்சலை நிறுத்துங்கள் .!
கெள-டில்யன்
இடுகை 0010

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home