மொழி ஞாயிறு தேவநேய பாவணர்
மொழிஞாயிறு தேவநேய பாவணர் பிறந்த நாள்
பிறப்பு 07 - 02 - 1902 இறப்பு 15 - 01 - 1981
தாயார் - பரிபூரணம் அம்மையார். தந்தையார் - ஞானமுத்து
பிறந்த மண் - சங்கரநாயினார் கோயில் - கோமதிமுத்தாபுரம்
---------------------------------------
சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் தென்திசை நோக்கி உயர்ந்திருக்கும் நூலகத்துக்கு தமிழகரசு தேவநேய பாவணர் மாவட்ட தலைமை நூலகம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்திருக்கிறது.
யார் அந்த தேவநேய பாவணர் ? - இன்றைய தலைமுறையினரில் பாவணரை அறிந்தவர் மிகச்சிலரே ! (பாவணரை அறிந்தவர்கள் அருள் கூர்ந்து பொறுத்து கொள்ளவும்.)
07 - 02 - 1902 ல் மதுரை - சங்கரநாயிநார் கோயிலை அடுத்த கோமதிமுத்தாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் தேவநேய பாவணர்.தாயார் பரிபூரணம் அம்மையார் - தந்தையார் ஞானமுத்து அவர்கள். பாளயங்கோட்டை cmj பள்ளியில் துவங்கிய பள்ளிப்படிப்பு சென்னைவரை தொடர்ந்தது தமிழகத்தின் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றிய பாவணர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திலும் சேலம் அரசு கல்லூரியிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.தனித்தமிழ் இயக்கத்தில் தீவிர நாட்டம் கெண்ட பாவணர்1974 ல் பண்டித நேரு அரசில் அமையப்பெற்ற உலக தமிழாராச்சி கழகத்தில் இயக்குநர் பொறுப்பில் பணியாற்றினார்.பாவணர் தமிழில் பெரும்பாலான இலக்கியங்களை இதுவரை எவரும் பெருமளவில் முயலாத மொழியின் அடிப்படை கூறுகளை ஆய்ந்து பல் வேறு சான்றுகளை உறுதிசெய்தார்.சோம்பிக்கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்ப தனித்தமிழ் இயக்கங்களை தோற்றிவித்தவர் பாவணர். பிழைகள் மலிந்து கிடந்த தமிழ் அகரமுதலியை திருத்தி அன்னை தமிழுக்கு புத்துணர்வு ஊட்டியவர் பாவணர்.தூங்கிக்கிடந்த தமிழினத்தை ' நெருப்பாயிரு தமிழா நெருப்பாயிரு ! செருப்பாயிருந்தது போதும் ' என்று சினத்துடன் முழக்கமிட்டவர் பாவணர். அவரது தமிழ்பணி கண்டு தமிழ் கடல் மறைமலை அடிகள் வியந்து வாழ்த்தியதை கவனிக்கவேண்டும்.புரட்சி கவிஞர் பாரதிதாசனோ இவர் எந் தமிழர்க்கெல்லாம் வேந்து என்று கவிபாடியதை யார்தான் மறக்கமுடியும்.தனித்தமிழ் பால் நாட்டம் கொண்ட இயக்கங்களும் தமிழகரசும் பாவணர் பணிகண்டு பதக்கங்கள் கொடுத்து மகிழ்ந்தன. நடுவண அரசோ அனைத்துக்கும் மேலாக பாவணர் உருவினை அஞ்சல் தலையில் பொருத்தி தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது.
1902 - க்கும் 1981 - க்கும் இடையே 78 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த பாவணர் அன்னை தமிழுக்கு அளித்த ஆய்வு நூல்கள் எண்ணற்றவை. ஏறதாழ 78 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த பாவணரின் கடும் உழைப்பு தமிழுக்கு புத்துயிர் ஊட்டியது.உலகுக்கே மூத்த மொழி நம் தமிழ் என்ற முகவரியை கொடுத்தது. இறுதிவரை தனித்தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாவணர் தன் 78 வது வயதில் மதுரையில் மறைந்தார்.
தமிழகரசும் தமிழறிஞர்ககளும் தொடர்ந்து பாவணர் பகழ்பாடி வரினும் காலம் செல்லச்செல்ல பாவணர் நினைவு மங்கிவருதல் மறுக்க இயலாதது.
பாவணரின் பணி மொழியின் மூலகூறுகளில் இருந்ததாலும் தனித்தமிழ்பற்று தமிழரிடையே சுறுங்கி காணப்படுதலாலும் பாவணர் நினைவு மங்கிவருதற்கு தலையாய காரணம் என்று கருதுகிறேன்.
இருப்பினும் பாவணர் நினைவை ஒவ்வொரு தலைமுறைக்கும் விடாது தொடர் ஓட்டம் போல் கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்று கருதுகிறேன்.
---------------------------------------------------
பாவணரின் பிறந்த நாளன்று எழுதப்பெற்ற குறிப்புறை
கெள-டில்யன்
இடுகை 0008
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home